தஞ்சாவூர், ஜன. 6: தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ள மொழிப்போர் தளபதி என அழைக்கப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.கணேசன் இல்லத்திற்க்கு நேரில் சென்று மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் கிருஷ்ணசாமி, பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.. விருது அறிவிக்கப்பட்டது குறித்து எல்.கணேசன் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஏற்கனவே முத்தமிழ் அறிஞர் கலைஞரால் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் தமிழ்நாடு அரசு சார்பில் பேரறிஞர் அண்ணா விருது அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்
The post முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.கணேசனுக்கு எம்பி., எம்எல்ஏ., வாழ்த்து appeared first on Dinakaran.