சென்னை: போலீசார் தாக்கி இறந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடுதர அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2010 ஏப். 4-ல் கோயில் விழாவில் மதுபோதையில் செந்தில்குமார் தகராறில் ஈடுபட்டதாக, வடமதுரை போலிஸ் கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறைக்கு அழைத்துச் சென்ற போது உடல் நலக்குறைவால் செந்தில்குமார் வழியிலேயே உயிரிழந்தார். போலீஸ் தாக்கிதான் தனது கணவர் இறந்தார்; சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.
The post போலீசார் தாக்கி இறந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடுதர அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.