அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 2 நாள் கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைப்பு

விருதுநகர், ஜன.4: விருதுநகர் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டி தேர்வுகளுக்கு தயார் படுத்தும் சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்த வழிகாட்டும் வகையில் கல்லூரிகளுக்கு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்து செல்லுதல் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக இரு தினங்கள் சென்னையில் உள்ள ஐஐடி, அரசு அருங்காட்சியகம், சென்னை மாநகராட்சி அலுவலகம், வண்டலூர் மிருகக்காட்சி சாலை, பிர்லா கோளரங்கம், மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட இடங்களுக்கு 100 மாணவர்கள், 10 ஆசிரியர்கள் என 110 பேர் களப்பயணம் செல்லும் 2 சுற்றுலா பேருந்துகளை கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

The post அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 2 நாள் கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: