விருதுநகர், ஜன.4: விருதுநகர் கலெக்டர் அலுவலக முன்பு நான்கு வழிச்சாலையில் தொடர் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்காக கடந்த 2021ல் மண் பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நான்கு வழிச்சாலையில் தமிழ்நாடு மருந்து கிடங்கு எதிரில் நான்கு வழி சாலை சென்டர் மீடியனில் கலெக்டர் அலுவலக பாலத்திற்கான பூமி பூஜை போடப்பட்டது. இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட தலைவர் னிவாஸ் கிரண்குமார் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர். இப்பாலம், மருந்து கிடங்கு எதிரில் துவங்கி ஆயுதப்படை வரை சுமார் 800 மீட்டர் நீளம் வரை அமைய உள்ளது. மேம்பால பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் அமையும் மேம்பாலம் appeared first on Dinakaran.