ஏழாயிரம்பண்ணை, ஜன.4: வெம்பக்கோட்டை அருகே சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே இனாம் மீனாட்சிபுரம் வழியாக செவல்பட்டி, துலுக்கன்குறிச்சி, கொட்டமடக்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலையில் தினமும் மினி லாரி, இருசக்கர வாகனம் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இப்பகுதி பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சாலை முறையாக பரமாரிக்கப்படாததால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கான மூலப்பொருட்களை இந்த சாலை வழியாக கொண்டு செல்லும் போது மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள், தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.
மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் என அனைவரும் குண்டும், குழியுமாக உள்ள சாலை வழியாக செல்லும்போது சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடிவதில்லை. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வெம்பக்கோட்டை அருகே சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.