- எம்.கே. ஸ்டாலின்
- ஜனாதிபதி
- இந்திய ஹஜ் சங்கம்
- சென்னை
- முதல் அமைச்சர்
- அபூபக்கர்
- ஜனாதிபதி
- ஹஸ்ரத் தஸ்தகிர் சாஹிப் தர்கா
- மயிலாப்பூர், சென்னை
- தின மலர்
சென்னை: பல்வேறு வகைகளில் நலத்திட்டங்களை வாரி வழங்கி இஸ்லாமிய மக்களுக்கு அரணாக நிற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூர் ஹஜரத் தஸ்தகீர் சாகிப் தர்கா சந்தனக்கூடு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் கலந்து கொண்டு துவா செய்தார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:
சந்தனக்கூடு நிகழ்ச்சி என்பது மத நல்லிணக்கத்தை எடுத்துக் கூறும் விதமாக சிறப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சந்தனக்கூடு நிகழ்ச்சியால் அனைவரும் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு அல்லாவின் கருணையால் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறோம். அல்லாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விழாவை நாம் சிறப்பாக முன்னெடுத்து வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டும் விழா சிறப்பாக நடைபெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இஸ்லாமிய மக்களின் நலனுக்காக பல்வேறு வகைகளில் நலத்திட்டங்களை வாரி வழங்கி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
அல்லாஹ்வின் கருணையால் அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ்வோம். இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த விழாக் குழுவினர் காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தர்காவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழக்கமாக வந்து துவா செய்வது வழக்கம். அந்த வகையில் அவருக்கும் இறைவன் நல்ல நலத்தையும், வளத்தையும் கொடுத்து நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுகிறேன். வரும் ஆண்டில் இதைவிட இன்னும் சிறப்பாய் நம் வாழ்க்கை அமைந்து இந்த நிகழ்ச்சி இன்னும் மேலும் சிறப்பாக நடத்த எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கி இஸ்லாமிய மக்களுக்கு அரணாக நிற்கிறார் மு.க.ஸ்டாலின்: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பேட்டி appeared first on Dinakaran.