- கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி
- திண்டுக்கல்
- குட்டியபட்டி
- மகாராஷ்டிரா
- ஆந்திரப் பிரதேசம்
- கர்நாடக
- கேரளா
- புதுச்சேரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நூலன்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குட்டியப்பட்டியில் கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி 10வது ஆண்டாக நேற்று நடைபெற்றது. கண்காட்சியில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் செவலை, மயில் சேவல், நூலான் கிரி, கொக்கு வெள்ளை, கருங்கீரி உட்பட பல்வேறு வகையான 350க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சேவல் முதல் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான சேவல்கள் பங்கேற்றன. கிளிமூக்கு, விசிறி வால் சேவல்கள் அதன் கொண்டை, மூக்கு தோற்றத்தை பொறுத்தும், வாலின் நீளம் ஆகியவற்றை கணக்கிட்டும் விலை போகின்றன.
சேவல் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ‘‘நம் பாரம்பரிய நாட்டு ரகத்தை காக்கும் வகையில் இந்த சேவல் கண்காட்சியை நடத்தி வருகிறோம்.
கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சேவல்கள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் முதல் பரிசாக 10 சேவல்களுக்கு பெரிய ஏர்கூலரும், இரண்டாம் பரிசாக 20 சேவல்களுக்கு சிறிய ஏர் கூலரும், மூன்றாம் பரிசாக 70 சேவல்களுக்கு மின்விசிறியும் வழங்கப்படுகிறது’’ என்றார். ரூ.7 லட்சம் விலை: கண்காட்சியில் மணப்பாறை யை சேர்ந்த ரங்கராஜன் கொண்டு வந்த கிளிமூக்கு சேவல் ரூ.7 லட்சத்திற்கு விலை பேசப்பட்டது. ஆனாலும், அதன் உரிமையாளர் அதனை விற்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். இந்த சேவலை பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
The post கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி ஒரு சேவல் விலை ரூ.7 லட்சம் appeared first on Dinakaran.