×

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு சலுகைகள்: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பேட்டி

சென்னை: சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் சமத்துவ கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த தேசத்தில் நாம் அனைவரும் பல்வேறு வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒருமைப்பாட்டு உணர்வோடு பயணிக்கிறோம் என்பதை உணர்த்தும் விழா இது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு சிறுபான்மை மக்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி,வேலை வாய்ப்பு ,சமூக மேம்பாட்டிற்கு ஏராளமான சலுகைகளை திட்டங்களை தருவதால் நாம் வாழ்வின் சமநிலைக்கு உயர்கிறோம். அவருக்கு அனைத்து இஸ்லாமியர்கள் சார்பில் மனம் நிறைந்த நன்றிகளை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு சலுகைகள்: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : MK ,President of the ,Indian Haj Association ,Chennai ,Christmas ,Luz Corner, Mylapore, Chennai ,President ,Abubakar ,MK Stalin ,President of ,
× RELATED பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கி...