×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் நீர்வரத்து 1,500 கனஅடியாக இருந்தது. நேற்று காலை விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1,128 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 1,307 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால், நிரம்பி இருந்த அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் 119.14 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 118.52 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 91.13 டிஎம்சியாக உள்ளது.

 

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur ,Cauvery ,Okenakkal Cauvery ,Mettur dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,701 கனஅடி