×

உபி கலவர வழக்கில் 28 பேருக்கு ஆயுள் தண்டனை: சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

லக்னோ: உபி மாநிலம் காஸ்கஞ்சில கடந்த 2018 ம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏபிவிபி) மற்றும் விஷ்வ இந்து பரிஷத்( விஇப) சார்பில் கொடி யாத்திரை நடந்தது. இந்த யாத்திரை குறிப்பிட்ட பகுதி வழியாக சென்ற போது பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதில் சந்தன் குப்தா என்ற கல்லூரி மாணவர் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கலவரத்தில் மொத்தம் 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சலீம், வாசீம் மற்றும் நசீம் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்தியதாக சலீம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ,சலீம்,வாசிம், நசீம் உட்பட 28 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். நசீருத்தின் மற்றும் அசிம் குரேஷி ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.

The post உபி கலவர வழக்கில் 28 பேருக்கு ஆயுள் தண்டனை: சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Special NIA ,Lucknow ,Kasganj, UP ,Republic Day ,Akhil Bharatiya Vidyarthi Parishad ,ABVP ,Vishwa Hindu Parishad ,VHP ,UP ,Dinakaran ,
× RELATED நிலம் ஆக்கிரமிப்பால் விரக்தி உ.பியில் தாய், 4 தங்கைகளை கொன்ற வாலிபர் கைது