×

நிலம் ஆக்கிரமிப்பால் விரக்தி உ.பியில் தாய், 4 தங்கைகளை கொன்ற வாலிபர் கைது

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் குபேர்பூரை சேர்ந்த முகமது அர்ஷத்(24) கடந்த டிசம்பர் 30ம் தேதி லக்னோவின் நாகாபுரி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தன் 4 தங்கைகள் மற்றும் தாயுடன் சென்று அறை எடுத்து தங்கி உள்ளார். புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் அர்ஷத், தன் 4 தங்கைகள் மற்றும் தாய் ஆகிய ஐந்து பேரையும் சுயநினைவிழக்க வைத்து, படுகொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து முகமது அர்ஷத் கைது செய்யப்பட்டார்.

இந்த கொலைக்கான காரணம் குறித்து முகமது அர்ஷத் பேசிய காணொலி வௌியிடப்பட்டுள்ளது. அதில் அர்ஷத் கூறியிருப்பதாவது, எங்கள் நிலத்தை ஆக்ரமித்து விட்டனர். வீட்டு பெண்களும் விற்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டோம். அதனால்தான் விரக்தியில் மானத்தை காப்பாற்றி கொள்ள 4 தங்கைகள், தாயை கொன்றேன்’’ என தெரிவித்துள்ளார். ஆக்கிரமித்தவர்களின் பெயரையும் அதில் கூறியுள்ளார்.

The post நிலம் ஆக்கிரமிப்பால் விரக்தி உ.பியில் தாய், 4 தங்கைகளை கொன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Mohammad Arshad ,Kuberpur, Agra ,Nagapuri ,New Year's Day ,
× RELATED பதவி உயர்வில் முறைகேடு புகார்...