நீர்வளத்துறையின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட 6 அணைகளுக்கு ‘சிறந்த அணை பராமரிப்பு’ விருது: அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்

சென்னை: நீர்வளத்துறையின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட 6 அணைகளுக்கான “சிறந்த அணை பராமரிப்பு” விருதுகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். 2016-2017ம் ஆண்டிற்கு கன்னியாகுமரி மாவட்டம், பெருஞ்சாணி அணை, 2017-2018ம் ஆண்டிற்கு ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 2018-2019ம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டம், வாணியாறு அணை, 2019-2020ம் ஆண்டிற்கு கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை, 2020-2021ம் ஆண்டிற்கு சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மற்றும் 2021-2022ம் ஆண்டிற்கு தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணை ஆகிய 6 அணைகளில் பணிபுரிந்த செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்க தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 வழங்கியும், தலைமைப் பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் மணிவாசன், நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் மன்மதன், நீர்வளத்துறையின் மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் ஜானகி, தயாளகுமார், முருகேசன் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

The post நீர்வளத்துறையின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட 6 அணைகளுக்கு ‘சிறந்த அணை பராமரிப்பு’ விருது: அமைச்சர் துரைமுருகன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: