ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்: வேல்முருகன்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. ஆளுநர் செயலில் சந்தேகம் உள்ளதாக குற்றச்சாட்டு வைத்தார். அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் ஆளுநர் பேச மறுப்பது ஏன்? என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
துணைவேந்தர் இல்லாததே காரணம்: ஈஸ்வரன்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு துணைவேந்தரை நியமிக்காததே காரணம் என கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை.யில் துணைவேந்தர் இன்னும் நியமிக்கப்படாததற்கு யார் பொறுப்பு?என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்: மதிமுக
அண்ணா பல்கலை. விவகாரத்தில் ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் என மதிமுக உறுப்பினர் சதன் திருமலைக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
The post அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!! appeared first on Dinakaran.