அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில ஆளுநர்களும் உரிமை என்ன, கடமை என்ன என்பதை அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.
துணைவேந்தர் நியமனத்தில் மூன்று உறுப்பினர்கள் தேர்வு குழு என்பதை, நான்காக அதிகரிப்பதன் மூலம் அதை செயல்படாமல் தடுப்பது ஆளுநரின் நோக்கமாக உள்ளது. இது நிறைவேறாது. முறைப்படி எல்லா நடவடிக்கை எடுக்கப்பட்டு துணைவேந்தர் நியமனம் செய்யப்படும். மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கின்ற, செயல்படுகின்ற முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் மட்டும்தான். இவ்வாறு அவர் கூறினார்.
The post துணைவேந்தர் நியமனம் தடுக்கும் ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது: அமைச்சர் கோவி.செழியன் உறுதி appeared first on Dinakaran.