திருச்செந்தூர் கோயில் முன் கடற்கரையில் மணல் அரிப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரளானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக கோயில் கடற்கரையில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

பக்தர்கள் குளிக்க தொடங்கும் இடத்தில் கடல் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாகி சுமார் 20 அடி நீளத்திற்கு 9 அடி ஆழத்திற்கு கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோயில் முன்புள்ள கடலில் இறங்க அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடல் அலைகளின் சீற்றத்தின் காரணமாக 2வது நாளாக நேற்றும் அதிகளவில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் தகரத்தை வைத்தும், தடுப்புவேலிகள் அமைத்தும் யாரும் இறங்கி செல்லாதவாறு அடைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதமும் இதேபோல் கடல் அரிப்பு ஏற்பட்டது. அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் மணலை கொட்டி சீர்செய்தனர். தற்போது அதே இடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இதே கடற்கரையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள அய்யா கோயில் பகுதியில் கடல் உள்வாங்கிய நிலையில் காணப்படுகிறது. அப்பகுதியில் சுமார் 50 அடிக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பாறைகளும், மணல் திட்டுகளும் அதிகமாக தென்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post திருச்செந்தூர் கோயில் முன் கடற்கரையில் மணல் அரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: