டிஜிட்டல் ஆவணங்கள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் வசம் உள்ளதால் அமலாக்கத்துறையால் வழங்க இயலாது என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிற்கு அமலாக்கத்துறை தர வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி இருந்தார். இதையடுத்து விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
The post பறிமுதல் செய்த டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை வழங்க வேண்டும்: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.