டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது: செல்வப்பெருந்தகை வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக இசையில் முற்போக்கான சிந்தனைகள், கருத்துகளை பரப்புகிற வகையில் முற்றிலும் மாறுபட்ட இசைக் கச்சேரிகளை நடத்தி, மக்களின் பேராதரவை பெற்று வருகிற டி.எம். கிருஷ்ணாக்கு மியூசிக் அகாடமியின் 98வது ஆண்டு மார்கழி கச்சேரியின் போது அவருக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டிருப்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், பாராட்டுகிறேன்.

பாரம்பரிய மரபுகளுக்கு மாறாக, துணிச்சலுடன் இசை கச்சேரிகளை நடத்தி வருபவர் டி.எம். கிருஷ்ணா. கர்நாடக இசை என்பது குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்கப்பட்டிருந்ததை மீட்டு அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக மாற்றியவர் டி.எம். கிருஷ்ணா. அதனால், அவர்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் மியூசிக் அகாடமி வழங்குகிற எம்.எஸ். சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருதை வழங்கக் கூடாது என்று வழக்கு தொடுத்து தற்போது உச்சநீதிமன்றம் அந்த விருதை வழங்கலாம் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு தற்போது விருது வழங்கப்படுகிறது. சமூக, கலாச்சார, சீர்திருத்த கருத்துகளை பொதுவெளியில் துணிந்து பேசக் கூடிய பேராற்றல் மிக்க டி.எம். கிருஷ்ணா பணி சிறக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்.

The post டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது: செல்வப்பெருந்தகை வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: