×

புளியந்தோப்பில் பிரியாணி கடையில் ஐ-போன் திருட்டு

கூடுவாஞ்சேரி: சென்னை புளியந்தோப்பில் பிரியாணி கடையில் ஐ போன் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து வலைவீசி தேடி வருகின்றனர். வடபழனி கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கபிலன் (29). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு அதிகாலை பிரியாணி சாப்பிடுவதற்காக புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை பகுதியிலுள்ள பிரியாணி கடைக்கு வந்துள்ளார். அப்போது பிரியாணி சாப்பிட்டுவிட்டு, கிளம்ப தயாரானார். அப்போது, டேபிளில் வைத்திருந்த அவரது ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள ஐ-போன் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து கபிலன் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post புளியந்தோப்பில் பிரியாணி கடையில் ஐ-போன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Biryani ,Pulianthop ,Mudravancheri ,Biryani store ,Pulianthop, Chennai ,Kaplan ,Vadpalani Karumaryamman Temple Street ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...