பொன்னேரி: பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களான சந்தோஷ், வினோத், பன்னீர்செல்வம், ரோகித், கிரி ஆகிய ஐந்து பேரும் கடலில் குளிக்கச் சென்றனர். இதில் கிரி (22) என்பவர் கடலில் மூழ்கினார். நண்பர்கள் முயற்சித்தும் முடியாததால் அவர்கள் பொன்னேரி தீயணைப்புத் துறையினருக்கும், திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். கடலில் கிரி மாயமான நிலையில் அவரை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று லைட் ஹவுஸ் கடற்கரையில் குளிக்கச்சென்ற கும்மிடிப்பூண்டி கோங்கல்மேடைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவனான சத்திய பிரியன் (22) என்பவரும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவரை பிணமாக மீட்டனர். திருப்பாலைவனம் போலீசார் மாணவன் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு: மற்றொருவர் மாயம் appeared first on Dinakaran.