இதற்கு மேயர் பிரியா தலைமை வகித்தார். இதன்பின்னர் அமைச்சர், மேயர் ஆகியோர் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். அப்போது மேயர் பிரியா கூறியதாவது; மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வரி போடாமல் இருந்தது. கடந்த 2022ம்ஆண்டு தான் சொத்து வரியை குறைவாக உயர்த்தினோம். கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் வரி குறைவாகத்தான் வசூலிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய தேவைகள் அதிகமாக உள்ளது. ஒன்றிய அரசு கொடுக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் அரசு சார்பில் மிக குறைவாக வரி வசூலிக்கப்படுகிறது. சாலைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டு வருகிறது.
நவம்பர், டிசம்பர் மாதம் பெய்யும் மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மாநகராட்சி சார்பில் 5 ஆயிரம் பகுதிகள் கண்டறியப்பட்டு 3 பகுதிகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பேட்ச் ஒர்க் செய்ய சூழல் இல்லாத சாலைகளில் புதிதாக சாலை போடப்பட்டு வருகிறது. தற்போதுதான் மழை முடிந்திருக்கிறது. இந்த மாதம் முதல் சாலைகள் போடப்படும். இவ்வாறு மேயர் கூறினார். அப்போது பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப்.முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா உள்பட பலர் இருந்தனர்.
The post கேரளா, ஆந்திரா, வட மாநிலங்களை விட தமிழகத்தில் தான் சொத்து வரி குறைவு: மேயர் பிரியா பேட்டி appeared first on Dinakaran.