×

இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவிக்கு பாலியல் சீண்டல்: போக்சோவில் வாலிபர் கைது

செய்யாறுதிருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கூடலூர் கிராமம், ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் விமல்ராஜ்(19). இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று விமல்ராஜ் மாணவியை பார்ப்பதற்காக தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட விமல்ராஜ், திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அந்த வாலிபரை மடக்கி பிடித்து பிரம்மதேசம் போலீசில் ஒப்படைத்தனர். புகாரின்படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விமல்ராஜை கைது செய்தனர்.

The post இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவிக்கு பாலியல் சீண்டல்: போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Pozzo ,Seeyaru, Thiruvannamalai district ,Theni District ,Uttamapaliam Taluga ,Koodalur Village ,Rajiv Gandhi City ,Boxo ,
× RELATED வில்லிவாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது