×

விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரத்தை சரிபார்க்க தொடக்கக் கல்வித்துறை அறிவுரை

சென்னை: இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை எமிஸ் தளத்தில் உறுதிசெய்ய வேண்டுமென தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 2012-13-ம் கல்வியாண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வரும் கல்வியாண்டின்(2025-26) முதல் பருவத்தில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேச தேவைப் பட்டியல் எமிஸ் தளத்தின் மூலம் பெறப்பட்டு, மாணவர்கள் எண்ணிக்கை விவரம் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது. எனவே, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்களும் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரத்தை சரிபார்க்க தொடக்கக் கல்வித்துறை அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Primary Education Department ,Chennai ,Directorate of Primary Education… ,Dinakaran ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...