×

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க திட்ட அறிக்கை: மாநில அரசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க திட்ட அறிக்கை தயாரித்து ஒன்றிய அரசுக்கு அனுப்ப மாநில அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிடக் கோரி தூத்துக்குடியை சேர்ந்த காமராசு என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க திட்ட அறிக்கை தயாரித்து ஒன்றிய அரசுக்கு அனுப்ப மாநில அரசுக்கு அறிவுறுத்தியது.

The post தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க திட்ட அறிக்கை: மாநில அரசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thamirabarani ,Madurai ,Thamirabarani river ,Union government ,Kamarasu ,Thoothukudi ,Court ,Dinakaran ,
× RELATED ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதியில் கலங்கலான குடிநீர் விநியோகம்