புத்தாண்டு இரவில் பைக் ரேஸ் செல்ல தடை.. மீறினால் வாகனம் பறிமுதல்: வேலூர் எஸ்.பி. எச்சரிக்கை!!

வேலூர்: வேலூரில் புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் ‘பைக் ரேஸ்’ செல்ல தடை; மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எஸ்.பி. மதிவாணன் தெரிவித்துள்ளார். குடிபோதையில் வாகனத்தை இயக்கினால் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். வேலூர் மாவட்டம் முழுவதும் 66 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. சாதாரண உடையில் காவல் குற்றப்பிரிவு தனிப்படை, டிரோன்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளபடும் என வேலூர் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post புத்தாண்டு இரவில் பைக் ரேஸ் செல்ல தடை.. மீறினால் வாகனம் பறிமுதல்: வேலூர் எஸ்.பி. எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: