இதற்கிடையே, கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டமும் காணப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் 8ம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டமும் இருக்கும். 7, 8ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
The post கிழக்கு திசை காற்று வேகமாறுபாடு; தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.