ஊட்டியில் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

*24 மணி நேரம் ரோந்து பணி

ஊட்டி : புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா தலங்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், இன்று இரவு 10 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கி விடும்.

புத்தாண்டை வரவேற்கும் வகையிலும், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டும் ஊட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஓட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து ஓட்டல்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

இன்று இரவு விழா துவங்கும் நிலையில், ஊட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் உட்பட அனைத்து ஓட்டல்களும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. இது மட்டுமின்றி காட்டேஜ்கள், ரிசார்ட்டுக்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவு தங்கியுள்ளனர்.

இன்றும், நாளையும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் கூட்டம் இருக்கும். குறிப்பாக, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் பைக்காரா நீர் வீழ்ச்சி போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும்.

சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் பல்வேறு வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதனால், சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாமல் இருக்க நீலகிரி காவல்துறை சார்பில் வழக்கத்தை காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டள்ளது.

அனைத்து சுற்றுலா தலங்களிலும் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் இன்றும், நாளையும் ஈடுபடவுள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக புத்தாண்டை கொண்டாட கூடாது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடாக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நாளை முதல் முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடத்தப்படுவார்கள். மேலும், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை மற்றும் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு, ரோந்து மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்க்ெகாள்வார்கள்.

சுற்றுலா தலங்களில் சீருடை அல்லாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுக்களில் விழா கொண்டாடுபவர்கள் குறித்த நேரத்திற்குள் விழாைவை முடித்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் முன்வர வேண்டும்’’ என்றனர்.

The post ஊட்டியில் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: