நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே நான்குவழிச்சாலையில் அவருக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இரு புறங்களிலும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்றனர். தொண்டர்கள் கூட்டத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று பொதுமக்களை பார்த்து கை அசைத்தார்.
இதையடுத்து உற்சாகமடைந்த தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். உடன் அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்பி, முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பணகுடி நெருஞ்சி காலனி பகுதியில் ராதாபுரம் சட்டமன்ற திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்பி ஞானதிரவியம், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மாவட்ட துணைச்செயலாளர் நம்பி, மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, ஒன்றிய செயலாளர்கள் சேவியர் ராஜா ஞானதிராவியம், ஜோசப்பெல்சி, பேரூர் செயலாளர்கள் பணகுடி தமிழ்வாணன், வள்ளியூர் சேதுராமலிங்கம், திசையன்விளை ஜான்கென்னடி, பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, துணைத்தலைவர் புஸ்பராஜ், மாணவரணி லெட்சுமணன், மந்திரம் மற்றும் திமுக அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான திமுகவினர் பங்கேற்றனர். முன்னதாக மழை பெய்த நிலையிலும் முதல்வரை வரவேற்க காத்திருந்த கூட்டத்தினர் கலையாமல் அங்கு திரண்டிருந்து முதல்வரை வரவேற்றனர்.
The post நாங்குநேரி, பணகுடியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.