மண்டபம்,டிச.31: மண்டபம் வடக்கு கடலில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் அலை மோதி வருவதையடுத்து கடலில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு ஒன்று சேதமடைந்து கரைக்கு கடல் அலை இழுத்துச் சென்றது. மண்டபம் வடக்கு கடலோரப் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் அலை கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது வீசி வருகிறது. இந்நிலையில் நேற்று சூறாவளி காற்றின் வேகம் அதிகரித்ததால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு ஒன்று அலை மோதி சேதமடைந்தது.
கடல் அலை அந்த படகை தள்ளி கொண்டு கரையை சேர்த்து விட்டது. மேலும் நேற்று கரையில் சேர்ந்த அந்த படகு மீது கடல் அலை வேகமாக மோதியதால் படகின் முன் பகுதி முருவதும் சேதமடைந்தது. வடக்கு கடலோரப் பகுதியில் மீன்பிடி இறங்கும் தளம் பகுதியில் இந்திய கடலோர காவல் படை அருகே கடலோரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் பலத்த அலை மோதி வருகிறது.
இதனால் மண்டபம் வடக்கு கடலோர பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் தண்ணீர் வீசி வருவதால், அந்த பகுதியில். மீனவர்கள் நடந்து செல்ல முடியாமல் தவித்தனர். அதுபோல நேற்று காலையில் கடலுக்கு 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் கரையிலேயே சூறாவளி காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், நடுக்கடலில் எப்படி இருக்குமோ என மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
The post மண்டபம் வடக்கு கடலில் பலத்த சூறாவளி காற்றால் படகு சேதம்: கவலையில் மீனவ குடும்பங்கள் appeared first on Dinakaran.