இந்நிலையில், நேற்று அமாவாசை என்பதால் பூக்களின் விலை 4 மடங்கு அதிகரித்தது. இதன்படி, ஒரு கிலோ மல்லி ₹2,100 இருந்து ₹2,600க்கும், ஐஸ் மல்லி ₹2,200லிருந்து ₹2,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் முல்லை ₹900லிருந்து ₹1,100க்கும், ஜாதி மல்லி ₹700லிருந்து ₹900க்கும், கனகாம்பரம் ₹800லிருந்து ₹1,400க்கும், அரளி பூ ₹200லிருந்து ₹500க்கும், சாமந்தி ₹80லிருந்து ₹100க்கும், சம்பங்கி ₹100 லிருந்து ₹190க்கும் பன்னீர்ரோஸ் ₹100லிருந்து ₹140க்கும், சாக்லேட் ரோஸ் ₹120லிருந்து ₹180க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறும்போது, அமாவாசை என்பதால் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இன்று மீண்டும் பூக்களின் விலை உயரும்’ என்றார்.
The post கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை 4 மடங்கு உயர்வு: அமாவாசையை ஒட்டி அதிகரிப்பு appeared first on Dinakaran.