எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவள்ளூர்: திருவேற்காட்டில் உள்ள எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் இண்டஸ்ட்ரி 5.0 நிலையான இலக்குகளை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. சென்னையை அடுத்த பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்ஏ பொறியியல் கல்லூரி மற்றும் ஐஇஇஇ இணைந்து ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியானது ‘இண்டஸ்ட்ரி 5.0 நிலையான இலக்குகளை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் தொடர்ந்து 6 நாட்கள் நடத்தியது.

தொடக்க விழாவிற்கு கல்லூரி தாளாளரும், பொருளாளருமான சு.அமர்நாத் தலைமை தாங்கினார். முதல்வர் எஸ்.ராமச்சந்திரன், துறைத் தலைவர்கள் ஏ.எம்.செர்மகனி, எஸ்.கோடீஸ்வரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எம்.நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஐஐடி மேலாண்மை ஆய்வுத் துறையின் பேராசிரியர் ஆர்.கே.அமித், வேல்டெக் பல்கலைக்கழக பதிவாளர் கண்ணன், ஐஇஇஇ தலைவர் எச்.ஆர்.மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

எம்பிரிட்ஜ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வி.வெங்கட்ராமன், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக வணிகப் பள்ளியின் பேராசிரியர் குல்வந்த் பவார், தொழில்துறை 5.0 மற்றும் அதன் நிலைத்தன்மையுடன் ஒருங்கிணைப்பு பற்றிய உலகளாவிய கண்ணோட்டத்தை விளக்கினர்.

மேலும், பெங்களூர் இன்ஃபோசிஸ் நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் முதன்மை ஆலோசகர் எஸ்.ராமச்சந்திரன், சென்னை அசோக் லேலண்ட் மேலாளர் ஏ.லியோ பெர்னார்ட், சென்னை, அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன், ஸ்கூல் ஆஃப் இன்டர்டிசிப்ளினரி டிசைன் அண்ட் இன்னோவேஷன் அலுவலர் ரகுராமன் முனுசாமி நிலைத்தன்மை இலக்குகளை அடைவதில் கல்வி மற்றும் தொழில்துறையின் தொடர்புகளை எடுத்துரைத்தனர். நிறைவு நாளில் ஐஇஇஇ சிஏஎஸ்எஸ் தலைவர் பி.சக்திவேல் சான்றிதழ்களை வழங்கினார்.

The post எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: