குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப் 4 பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப் 4 பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை கைபேசி எண்ணுடன் தெரிவிக்க வேண்டும்.

இந்த இலவசப் பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணி முதல் மதியம் 3.30 மணிவரை வருகிற ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 97897 14244 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம் என இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

The post குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: