விழாவில் பேசிய சிறுபான்மையினர் மக்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் பேசியதாவது: திருவள்ளுர் மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்காக, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 8,571 மாணவர்களுக்கும், தமிழ்ப் புதல்வன் திட்டதின் கீழ் 8,189 மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வியில் பயிலும் மாணவியர்களுக்கு இம்மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் 360 மாணவியர்கள் பயன் பெறுகின்றனர். ஆக மொத்தம் ஒரு மாதத்திற்கு 17,120 மாணவர்களுக்கு ரூ.1,71,20,000 செலவினம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இப்படி மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு பார்வையின் மூலம் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட சமுக பாதுகாப்பு நல அலுவலர் வாசுகி, திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், தனித்துணை ஆட்சியர் கணேசன், ஆவடி மாநகராட்சி மண்டல தலைவர்கள் அம்மு, அமுதா பேபி சேகர் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா: அமைச்சர் நாசர் பங்கேற்பு appeared first on Dinakaran.