இதையடுத்து கோவை கார் வெடிப்பு வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. அதன்பின், இந்த வழக்கில் உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில், 14 பேர் மீது 4 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அபு அனீபா, சரண் மாரியப்பன், பவாஸ் ரகுமான் ஆகிய 3 பேரை என்ஐஏ போலீசார் அண்மையில் கோவையில் கைது செய்தனர். இவர்கள், கோவை கார் வெடிப்பு வழக்கு விசாரணை நடந்து வரும் பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறையில் உள்ள அபு ஹனிபா, பவாஸ் ரகுமான், சரண் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி என்.ஐ.ஏ. மனு தாக்கல் செய்தது. 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அனுமதி கேட்ட நிலையில் பூவிருந்தவல்லி கோர்ட் 3 நாள் அனுமதி அளித்தது. பூவிருந்தவல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து 3 பேரையும் அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.
The post கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள 3 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. விசாரணை appeared first on Dinakaran.