ஜீன்ஸ் பிரச்சனையால் உலக ரேபிட் செஸ் போட்டியில் பங்கேற்காத கார்ல்ஸன், பிளிட்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார். உலகின் தலைசிறந்த செஸ் வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் நார்வே நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன். இவர் நியூயார்க் நகரில் வால் ஸ்ட்ரீட் பகுதியில் டிசம்பர் 26 முதல் 31 வரை நடைபெற்று வரும் 2024 ஆம் ஆண்டுக்கான உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில், மேக்னஸ் கார்ல்சன் 2 ஆம் நாள் போட்டிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்ததாக அவரை உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து தகுதி நீக்கம் செய்தது.
சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே. மேலும், போட்டியின் ஆடை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சனுக்கு 200 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஜீன்ஸ் உடையை மாற்றிக் கொண்டு போட்டியில் பங்கேற்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு கார்ல்சன் மறுப்பு தெரிவித்த நிலையில் போட்டியின் 9வது சுற்றிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஃபிடே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலக ரேபிட் செஸ் போட்டியில் பங்கேற்காத கார்ல்ஸன் பிளிட்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஃபிடே நடத்தும் பிளிட்ஸ் செஸ் போட்டியும் குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாட்டுடன் நடக்கும் அதிவேக போட்டியாகும். மரபான உடைகளை மட்டுமே செஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அணிய வேண்டும் என்ற விதியை ஃபிடே தளர்த்தியது. ஜீன்ஸ் அணிந்து விளையாட ஃபிடே அனுமதித்துள்ள நிலையில் 30, 31-ல் நடைபெறும் பிளிட்ஸ் போட்டிகளில் பங்கேற்கிறார்.
The post உலக ரேபிட் செஸ் போட்டியில் பங்கேற்காத கார்ல்ஸன், பிளிட்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.