சென்னையில் செம்மொழி பூங்காவில் ஜன.2ம் தேதி மலர் கண்காட்சி

சென்னை: வருகிற 2ம் தேதி சென்னை மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக, 2 மாதங்களாக அனைத்து பூங்காக்களிலும் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிற பெட்டூனி யாக்கள் மஞ்சள் மாரி, தங்கம், ஊதா, வெள்ளை மற்றும் கிரீம் டெல்பினியம் உள்ளிட்ட விதவிதமான மலர்கள் கண்காட்சியில் இடம் பெறுகிறது.

தோட்டக் கலைத்துறையில் இருந்து சுமார் 30 லட்சம் மலர்கள் இக்காட்சிக்கு கொண்டு வரப்படுகின்றன. கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும். கண்காட்சியை ஜனவரி 18ம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் செம்மொழி பூங்காவில் ஜன.2ம் தேதி மலர் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: