நச்சு வாயுவை சுவாசித்ததால் பிரபல கனடா நடிகை மூச்சுத்திணறி பலி

பென்சில்வேனியா: பென்சில்வேனியாவில் நச்சு வாயுவை சுவாசித்ததால் பிரபல கனடா நடிகை டேல் ஹாடன் மூச்சுத்திணறி பலியானார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகியும், கனடா நடிகையுமான டேல் ஹாடன் (76), பென்சில்வேனியாவில் வசித்து வந்தார். அவரது இரண்டாவது மாடி வீட்டில் இருக்கும் படுக்கையறையில் மயக்க நிலையில் கிடப்பதாக உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மயக்க நிலையில் கிடைந்த டேல் ஹாடனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் டேல் ஹாடன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பக்ஸ் கவுண்டி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘அவரது வீட்டில் இருந்த எரிவாயு வெப்ப அமைப்பின் புகைப் போக்கியில் இருந்து கார்பன் மோனாக்சைடு கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. நச்சு வாயுவான அந்த கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால், டேல் ஹாடனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் மயக்க நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர். கடந்த 1970ம் ஆண்டுகளில் மாடல் அழகியாக கால்பதித்த டேல் ஹாடன், 1980களில் வோக், காஸ்மோபாலிட்டன், எல்லே மற்றும் எஸ்க்வைர் ஆகியவற்றின் அட்டைப்படங்களில் தோன்றினார். கடந்த 1970 முதல் 1990 வரை 30க்கும் மேற்படங்களில் படங்களில் நடித்துள்ளார். கடந்த 1970ம் ஆண்டு வாக்கில் பெண் குழந்தையை பெற்றெடுத்த பிறகு தனது மாடலிங் தொழிலை விட்டுவிட்டார். 1991ல் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு மீண்டும் மாடலிங் தொழிலுக்கு திரும்பினார் என்று தகவல்கள் கூறுகின்றன.

The post நச்சு வாயுவை சுவாசித்ததால் பிரபல கனடா நடிகை மூச்சுத்திணறி பலி appeared first on Dinakaran.

Related Stories: