மார்த்தாண்டத்தில் டெம்போவின் பின்பகுதி விழுந்து சிறுமி நசுங்கி பலி

மார்த்தாண்டம் : மார்த்தாண்டத்தில் தூக்கி விடப்பட்டு இருந்த டிப்பர் டெம்போவின் பின்பகுதி தானாக விழுந்து சிறுமி சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானார்.மார்த்தாண்டம் வடக்கு தெரு மேலங்குளத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் துணி அயனிங் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் விஜயதர்ஷினி (16). இவர் மார்த்தாண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் அருகில் உள்ள சக தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.பாகோடு எருமைக்குடிவிளையைச் சேர்ந்த டிப்பர் டெம்போ டிரைவர் தினிஷ்லால் அந்தப் பகுதியில் டெம்போ நிறுத்திவிட்டு, பின்பகுதியை மேல் நோக்கி தூக்கி உயர்த்தி விட்டு சென்றுள்ளார்.

இந்த டிப்பர் டெம்போ அருகே சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் டெம்போ பின்பகுதி தானாக விழுந்தது. இதில் விஜயதர்ஷினி சிக்கி சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மார்த்தாண்டத்தில் டெம்போவின் பின்பகுதி விழுந்து சிறுமி நசுங்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: