சென்னை: மறைந்த மன்மோகன் சிங்கிற்கு சென்னையில் திருவுருவச் சிலையுடன் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அருள் அன்பரசு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் அனுப்பியுள்ள மனு: மன்மோகன் சிங்கின் மறைவு இந்தியாவுக்கு பேரிழப்பு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி உணர்வோடு டெல்லிக்கு சென்று அவர் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்த போது பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெற்றதையும், குறிப்பாக உள்கட்டமைப்பு, மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் கடல்நீர் குடிநீர் ஆக்கும் திட்டங்கள் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தார். அந்த வகையில் மறைந்த மன்மோகன் சிங்குக்கு சென்னையில் அவரது திருவருச் சிலையோடு மணிமண்டபம் அமைத்து அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார்.
The post மன்மோகன் சிங்குக்கு சென்னையில் மணிமண்டபம்: காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை appeared first on Dinakaran.