பணகுடி அருகே பரிதாபம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

நெல்லை, டிச. 27: பணகுடி அருகே வீடு கட்டுமானத்திற்காக கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நெல்லை மாவட்டம், பணகுடி அடுத்த காவல்கிணறு இசக்கி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நெல்சனின் மகன் செல்வன் (34). இவர், கட்டிடங்களுக்கு கட்டுமான பணியின் போது கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தார். ௳ழக்கம்போல் நேற்று முன்தினம் பணகுடியில் உள்ள பரதன் என்பவரது வீட்டில் நடந்த கட்டுமானப் பணியில் பங்கேற்ற இவர், கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கிவீசப்பட்ட செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த பணகுடி போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பணகுடி அருகே பரிதாபம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: