தியேட்டர் கூட்ட நெரிசலில் இறந்த பெண் குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிதி உதவி: புஷ்பா படக்குழு வழங்கியது

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த 4ம் தேதி புஷ்பா-2 பிரீமியம் ஷோ வெளியானபோது, கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயமடைந்து, கோமா நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தற்போது சிறுவன் ஸ்ரீதேஜ் உடல் நிலையில், முன்னேற்றம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், போலீசார் அனுமதி மறுத்தும் நடிகர் அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு வந்ததே, பெண் பலியான சம்பவத்துக்கு காரணம் எனக்கூறி, அல்லு அர்ஜூன் மற்றும் புஷ்பா பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் உரிமையாளர் உள்பட 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜூன், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அல்லு அர்ஜூனை சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்த போலீசார், 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சி கழக தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ, புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், மைத்திரி மூவிஸ் நிர்வாகத்தினர் இறந்துபோனரேவதி குடும்பத்திற்கு ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கினர். இதில் அல்லு அர்ஜூன் தரப்பில் ரூ.1 கோடியும் புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவீஸ் சார்பில் ரவி, நவீன் இணைந்து ரூ.50 லட்சமும், இயக்குனர் சுகுமார் தரப்பில் ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடி வழங்கினர்.

The post தியேட்டர் கூட்ட நெரிசலில் இறந்த பெண் குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிதி உதவி: புஷ்பா படக்குழு வழங்கியது appeared first on Dinakaran.

Related Stories: