2023 – 2024 நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.2,244 கோடி தேர்தல் நன்கொடை :புள்ளி விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!!

டெல்லி : 2023 – 2024 நிதியாண்டில் பாஜக ரூ.2,244 கோடி தேர்தல் நன்கொடையாக பெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடை தொடர்பான புள்ளி விவரங்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தனி நபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாஜக 20,000த்திற்கும் அதிகமான நன்கொடைகளை ரூ.2,244 கோடி வசூலித்து இருப்பது தெரியவந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 3 மடங்கு அதிகமாகும்.

பாஜகவிற்கு அடுத்தப்படியாக பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.580 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலமாக எதிர்க்கட்சிகள் தொழில் அதிபர்களை மிரட்டி தங்கள் கட்சிக்கு பாஜக தேர்தல் நன்கொடை பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. கடந்த பிப்ரவரி 15ம் தேதி தேர்தல் பத்திர முறை சட்ட விரோதமானது எனக்கூறி, அவற்றை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரை பெறப்பட்ட தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் கடந்த மார்ச் மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

The post 2023 – 2024 நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.2,244 கோடி தேர்தல் நன்கொடை :புள்ளி விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!! appeared first on Dinakaran.

Related Stories: