அப்போது, அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்து நீதிபதி அருண் பரத்வாஜ் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழு நிறுவனங்கள் அதுனிக் நிறுவனத்தில் பங்கு மூலதனமாக ரூ.50.37 கோடியை முதலீடு செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் நிலக்கரி சுரங்க உரிமத்தை பெற்று விடும், அதன் மூலம் பங்குகள் விலை உயர்ந்து லாபம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் சட்டவிரோதமாக அதுனிக் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை கூறி உள்ளது.
இவ்வாறு ஒரு குற்றத்தின் மூலம் பணம் ஈட்டுவதற்கான முயற்சியையோ அல்லது பண பலன்களை எதிர்பார்ப்பதோ சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தில் வகைப்படுத்த முடியாது. இந்த முதலீடுக்கும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இதற்கு முன் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகவும், அரசை ஏமாற்றியதாகவும் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றனர். அதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அவர்களின் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
The post அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தள்ளுபடி குற்றம் மூலம் பணம் ஈட்டும் முயற்சி பணமோசடி ஆகாது: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.