கோவை அருகே கர்ப்பிணி யானை மாரடைப்பால் சாவு

பெ.நா.பாளையம்: கோவை தடாகம் அருகே அமர்ந்த நிலையில் உயிரிழந்த கர்ப்பிணி யானை மாரடைப்பால் இறந்தது என உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கோவை பன்னீர்மடை அருகே வருப்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமர்ந்த நிலையில் பெண் யானை நேற்று இறந்து கிடந்தது. தகவலறிந்து வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்தனர். அப்போது யானை கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

மேலும் கால்நடை மருத்துவர் நடத்திய உடற்கூராய்வில், காட்டு யானைக்கு 30 வயது என்பதும், இதயம், ஈரல், நுரையீரல் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளதும் தெரியவந்தது. எழுந்திருக்க முயன்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உட்கார்ந்த நிலையிலேயே இறந்ததாக மருத்துவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனைகட்டி வனபகுதியில் கால்நடை மருத்துவர்கள், யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர்.

The post கோவை அருகே கர்ப்பிணி யானை மாரடைப்பால் சாவு appeared first on Dinakaran.

Related Stories: