இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:
27ம் தேதி வெள்ளிக்கிழமை, 28ம் தேதி சனிக்கிழமை, 29ம் தேதி ஞாயிறு வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை 245 பேருந்துகளும், 28ம் தேதி சனிக்கிழமை 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 27ம் தேதி மற்றும் 28 ஆகிய தேதிகளில் மொத்தம் 81 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் மாதாவரத்திலிருந்து 27ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
The post வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.