மகேஷ் குமார் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மாசார்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ‘விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்த ராஜ்குமார், மகேஷ் குமாருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்’ என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
The post எட்டையபுரம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.