கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

தாம்பரம்: சேலையூர், ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் திலகா (66). இவர், தனது கணவருடன் தாம்பரத்தில் உள்ள பிரபல துணி கடைக்கு சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள ஒரு கடையில் ஐஸ்கிரீம் வாங்கிவிட்டு, பணம் கொடுப்பதற்காக ஹேண்ட் பேக்கை பார்த்தபோது, அதில் வைத்திருந்த செல்போன் மாயமாகி இருந்தது. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் ஒரு பெண், திலகா அருகில் நிற்பது போல் நடித்து, அவரது ஹேண்ட் பேக்கில் இருந்த செல்போனை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து செல்போன் லொக்கேஷனை வைத்து அவரை மடக்கி படித்தனர். விசாரணையில், பல்லாவரம் பகுதியை சேர்ந்த தில் சாந்தி (54) என்பதும், அவர் மீது கிண்டி, தி.நகர், குரோம்பேட்டை, பல்லாவரம் போன்ற காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் கைவரிசையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து செல்போனை மீட்டு திலகாவிடம் ஒப்படைத்தனர். பின்னர், தில் சாந்தியை கைது செய்தனர்.

The post கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: