விவசாயிகள் தினம் முதல்வரை சந்தித்து விவசாயிகள் சங்கத்தினர் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை “தேசிய விவசாயிகள் தினத்தை” முன்னிட்டு நேற்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் பி.கே.தெய்வசிகாமணி தலைமையில் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது தமிழ்நாடு விவசாயிகள் நலன் குறித்த பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவினையும் அளித்தனர். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post விவசாயிகள் தினம் முதல்வரை சந்தித்து விவசாயிகள் சங்கத்தினர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: