சில்லி பாயின்ட்

* இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அஷ்வின் ரவிசந்திரனுக்கு பதில், அணியுடன் இணைய மங்களூர் ஆல் ரவுண்டர் தனுஷ் கோடியான்(26) இன்று ஆஸ்திரேலியா புறப்படுகிறார்.
* ‘களத்தை காரணம் போட்டி அஷ்வின் போன்ற தலை சிறந்த பந்து வீச்சாளர்களை நீக்கும் அணி நிர்வாகம், அதே காரணத்தை காட்டி பேட்ஸ்மேன்களை நீக்குவது இல்லை. அஷ்வினுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தால் சிறப்பாக செயல்பட்டிருப்பார். அவருக்கு துணைக் கேப்டன் பதவிக் கூட தரவில்லை’ என்று பிசிசிஐ-யை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் கேப்டன் கவாஸ்கர்.
* விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நேற்று சி பிரிவில் உள்ள கர்நாடகா 3 விக்கெட் வித்தியாசத்தில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது. அதிகப்டசமாக புதுச்சேரி கேப்டன் அருண் கார்த்திக் 71ரன்னும், கர்நாடகா வீரர் சமரன் ரவிசந்திரன் ஆட்டமிழக்காமல் 100ரன்னும் எடுத்தனர்.
* ஒன்றிய அரசு சிறந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ‘கேல் ரத்னா’ விருதுக்கான பரிந்துரை பட்டியல் நேற்று வெளியானது. அதில் ஒரு ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற ஒரே இந்தியரான மனு பாக்கர்(துப்பாக்கி சுடுதல்) இடம் பெறாதது விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
* ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையே அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆண்கள், பெண்கள் ‘ஆஷஸ் கோப்பை’ தொடரில் விளையாட உள்ள அணிகளை இரு நாடுகளும் அறிவித்துள்ளன. அதேபோல் இம்மாதம் நடைபெற உள்ள இலங்கை-நியூசிலாந்து டி20, ஒருநாள் தொடருக்கான அணிகளை இரு நாடுகளும் நேற்று அறிவித்தன.
* சொந்த மண்ணில் பாகிஸ்தானிடம் முழுமையாக தொடரை இழந்த தென் ஆப்ரிக்க பயிற்சியாளர் ராஃப் வால்டர், ‘அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை’ கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்கா சிறப்பாக விளையாடும்’ என்று தெரிவித்துள்ளார்.

The post சில்லி பாயின்ட் appeared first on Dinakaran.

Related Stories: