வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய விவசாயிகள் தின கருத்தரங்கம்

 

நாகப்பட்டினம்,டிச.21: தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு வரும் 23ம் தேதி சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 23ம் தேதி காலை 10.30 மணிக்கு தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விவசாயிகள் மற்றும் – விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய விவசாயிகள் தின கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: