திருமலை: திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்கான ஸ்ரீவாணி மற்றும் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி மார்ச் மாதத்திற்கான ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் டிசம்பர் 25ம் தேதி காலை 11 மணிக்கும், மார்ச் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 26ம் தேதி காலை 11 மணிக்கும் வெளியிடப்படும்.
திருமலையில் உள்ள தங்கும் அறைகள் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்யும் விதமாக வெளியிடப்படும். எனவே பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தேவஸ்தானத்தின் இணையதளத்தில் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாத தரிசன டிக்கெட் வெளியிடும் தேதி மாற்றம் appeared first on Dinakaran.